மாகாண சபைகளினுடான அனைத்து ஆசிரியர் நியமனங்களும் இடைநிறுத்துமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் வரை மாகாணங்களின் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அனைத்து மாகாண ஆளுனர்களிடமும் வேண்டுகோள் விடுக்கும் ஜனாதிபதியின் செலாளரினூடாக அறிவிக்கும் படி 2021.09.13 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி மாகாண சபைகளினூடாக மேற்கொள்ளப்படும் ஆசிரியர் நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படுவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதே நேரம், மூன்று தினங்களுக்கு முன்னர், தென்மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.