மாணவர்களுக்கான அரசின் வட்டியில்லா இலகு கடன் திட்டம்

 

உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகப் பிரவேசம் கிடைக்காத மாணவர்களுக்கான அரசின் வட்டியில்லா இலகு கடன் திட்டம்

அரச பல்கலைக்கழக வாய்ப்புக் கிட்டாத அனேக மாணவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டுப்பல்கலை வாய்ப்புக்களுக்கான முதலீடு அதிகமாகும்.

அத்தகைய மாணவர்களுக்கு அரசு இத்திட்டத்தை அறிவித்துள்ளது.

உச்ச பட்ச மூன்று தடவைகளின் கீழ் 2018, 2019, 2020ஆம் ஆண்டு உயர்தரத்தில் தோற்றி ஒரே அமர்வில் 03 (S) சாதாரண சித்தியுடன் பொதுச்சாதாரண பரீட்சையில் 30 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டுமென்பது விண்ணப்பிப்பதற்கான அடிப்படை நிபந்தனை ஆகும்.

-SLIIT, AQUINAS, NSBM, CINEC, SIBA, ICASL, SCL, HORIZON, KIU, SLTC, ESOFT, SAEGIS, ICBT, BCI, IOC, BMS, RIC, IIHS, BCI போன்ற 18 பட்டப்படிப்பு நெறிகளை வழங்கும் உயர் கல்வி நிறுவகங்களில் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் அங்கீகாரம் பெற்ற 111 பட்டப்படிப்பு நெறிகள் இந்தத் திட்டத்தில் காணப்படுகின்றன.

–  இவ் உயர் கல்வி நிறுவகங்களில் Physical Science, 

Biological Science, 

English Special Degree, 

Psychology, 

IT, ICT, 

Computer Networking, 

Software Engineering, 

MIS, 

Pharmaceuticals, 

Cosmetics, 

Acupuncture, 

Biomedical Science, 

Mobile Computing, Multimedia, Computer Science, Interior Design, Environmental Technology, Chemical Science, Civil Engineering, Automotive Engineering, Telecommunication Engineering, Mechanical Engineering, Electronics, Mechatronics, Agricultural Technology, Management, Accounting, Finance, Project Management, Logistics, Transportation, Supply Chain Management, Tourism, Banking, Hospitality Management, Marketing, Human Resources, Industrial Management, Mathematics, Digital Marketing என சமகால தொழில்துறைக்குத் தேவையான ஏராளமான பட்டப்படிப்புகளைத் தொடர முடியும்.

– உச்ச பட்சமாக Rs. 800,000 (எட்டு இலட்சம்) வட்டியற்ற கடன் (Interest free loan) பெற முடியும்.

– பட்டத்தைப் பூர்த்தி செய்த பின் ஒரு வருட சலுகைக் காலத்தின் பின்னர் 7 அல்லது 8 ஆண்டுகளில் மீளச் செலுத்த முடியும். ஒரு வருட சலுகைக் காலத்தினுள் எவ்வித கொடுப்பனவும் செலுத்தத் தேவை இல்லை.

– தேவைப்படின், உச்ச பட்சமாக Rs. 300,000 (மூன்று இலட்சம்) உதவிக் கடனும் (Stipend Loan) பெற முடியும்.

– இதற்கான online மூலமான விண்ணப்பங்கள்  2021.12.21 முதல் 2022.01.31 ஏற்கப்படும். இறுதி நேரம் வரை காத்திராமல் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பியுங்கள். அதற்கான இணைப்பு https://studentloans.mohe.gov.lk/loan_application/ யில் காணப்படுகிறது.

–  மேலதிக தகவல்களை  070355970 – 979 என்ற தொலைபேசி ஊடாக அல்லது dsls@mohe.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக அல்லது https://studentloans.mohe.gov.lk/loan_application/index.php/login/guide_book என்ற முகவரியில் காணப்படும் கையேட்டினூடாக அல்லது 2021.12.20 நாளிதள்களினூடாகப் பெற முடியும்.

மாணவர்களே, நல்ல ஒரு பட்டப்படிப்பினைப் பெற அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பாகும்.

நிதிப் பிரச்சினைகளுடன் உயர்கல்வியைத் தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்கள் இதனை உடனே பயன்படுத்துங்கள்.

ஏனையோருக்கும் தெரியப்படுத்துங்கள்.

-ஷிப்லி அஹமட்-

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!