மினுவாங்கொடையில் முன்பள்ளி ஆசிரியைக்கு ஒமிக்ரோன் தொற்று!
மினுவாங்கொடை, நில்பனாகொடவிலுள்ள முன்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு ஒமிக்ரோன் பிறழ்வு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், 20 மாணவர்கள், தலைமையாசிரியர் மற்றும் மற்றுமொரு ஆசிரியர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
மாணவர்களுக்கோ அல்லது ஆசிரியரியருக்கோ எந்த அறிகுறியும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.