மீள் மதிப்பீட்டில் C சித்தி A சித்தியாக மாறியுள்ளது.

 

Teachmore

க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் மீள் மதிப்பீட்டின் பின்னர் பெறுபேறுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

 கண்டி மாணவர் ஒருவரின் C பெறுபேறு  மறு மதிப்பீட்டின் பின் A பெறுபேறாக மாற்றப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளது.

 இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

 கண்டி தர்மராஜா கல்லூரியின் மாணவன் ருச்சிர நிசங்க அபேவர்தன தோற்றிய இணைந்த கணிதம் பாடம் தொடர்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு கணித பாடத்தில் தோற்றிய இம்மாணவி அந்த பாடத்தில் C சித்தி பெற்றிருந்தார்.

 இரசாயனவியல், மற்றும் பௌதீக விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் A சித்தி பெற்றுள்ளார்.

 முடிவுகளின்படி, மாணவர்களின் Z மதிப்பெண் 2.0084 ஆகவும், மாவட்ட மதிப்பீடு 68 ஆகவும், தேசிய மதிப்பீடு 966 ஆகவும் இருந்தது.

 மீள் மதிப்பீட்டின் பின் C சித்தி A சித்தியாக மாற்றமடைந்தது. 

இதன்படி, இசட் மதிப்பெண் 2.5538 ஆகவும், மாவட்ட தரப்படுத்தல் 12 ஆகவும் மற்றும் தேசிய தரப்படுத்தல் 124 ஆகவும் மாறியுள்ளது.

 மஈள் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 48,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் 3,329 பெறுபேறுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!