மேலும் 125 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும்
மேலும் 125 பாடசாலைகள் தேசிய பாடசாலை மட்டத்திற்கு உயர்த்தப்படும் என இலங்கையின் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய பாடசாலைகள் இல்லாத 125 பிரதேச செயலகங்கள் ஒவ்வொன்றும் தேசிய பாடசாலைகளாக நியமிக்கப்படும் என்று தேசிய பாடசாலைகளின் பணிப்பாளர் கித்சிறி லியனகம தெரிவித்துள்ளார்.
பல கட்டங்களாக நடைபெறவுள்ள 1,000 தேசிய பாடசாலைகள் உருவக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள 831 பாடசாலைகள் தேசிய பாடசாலை மட்டத்திற்கு உயர்த்தப்படுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.
9 மாகாணங்களில் உள்ள 9 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தேசிய பாடசாலைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
தற்போது, இலங்கையில் 382 தேசிய பாடசாலைகள் இயங்கி வருகின்றன, மேலும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி அனுபவத்தை வழங்குவதே தேசிய பாடசாலைகள் திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.