மேல்மாகாண இறுத் தவணைப் பரீட்சை
2021 இல் நடத்த முடியாத இறுதித் தவணைப் பரீட்சையை 2022 ஆம் ஆண்டு நடத்த மாகாணக் கல்வித் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மாகாணக் கல்வி அலுவகம் அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.
மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் தரம் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான வினாத்தாள்கள் தயாரித்து வலய அதிகாரிகளிடம் கையளிக்கப்படும்.
9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான வினாத்தாள்களை மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் அச்சிடுதல் மற்றும் வலயக் கல்வி அலுவலகங்கள் மூலம் பாடசாலைகளுக்கு வழங்குதல்.
அதன்படி, 6, 7, 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கான தவனைப் பரீட்சை 22.03.16 முதல் 2022.03.24 வரையும், 10 மற்றும் 11 ஆம் வகுப்புளுக்கான தவணைப் பரீட்சை 2022.03.25 முதல் 2022.04.01 (வார இறுதி உட்பட) வரையும் நடத்த முன்மொழியப்பட்டது.
(நிலமைகளைப் பொறுத்து இந்த நாட்கள் மாறலாம். )