மேல் மாகாணப் பரீட்சை: மூன்று மட்டங்களில்

மேல் மாகாணத்தில் பாடசாலை தவணைப் பரீட்சைகளை மூன்று பிரிவுகளின் கீழ் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிக்கையில், மேல் மாகாணத்தில் தரம் 11 க்கு மாகாண மட்டத்திலும், தரம் 9 மற்றும் 10 க்கு வலய மட்டத்திலும், தரம் 6,7,8 ஆகியவற்றுக்கு பாடசாலை மட்டத்திலும் தவணைப் பரீட்சைகள் நடைபெறும்.

ஏனைய மாகாணங்களிலும் தவணைப் பரீட்சைகள் தடையின்றி மாகாண மட்டத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

பரீட்சைக்குத் தேவையான தாள்களைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இந்தியக் கடன் வசதியின் கீழ் கோரிக்கையை முன்வைக்க ஜனாதிபதியின் செயலாளர் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!