இதற்கான விண்ணப்பங்கள் அரச வர்த்தமாணியில் பகிரங்கமாகக் கோரப்படவுள்ளன. தேசிய பாடசாலைகளுக்கு 91 நியமனங்களும் மத்திய மாகாணப் பாடசாலைகளுக்கு 20 நியமனங்களும் வடமாகாணத்திற்கு 16 நியமனங்களும் வடமேல் மாகாணத்திற்கு 41 நியமனங்களும் ஊவா மாகாணத்திற்கு 2 நியமனங்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் தொடர்பான விபரங்களை உரிய முறையில் குறித்த காலப்பகுதிக்குள் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படாமையினால் கிழக்கு மாகணத்திற்கான மௌலவி ஆசிரியர் நியமனத்திற்கான வெற்றிடங்கள் தொடர்பாக நடடிவடிக்கைகள் எடுக்க வில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் இவ்வறிவித்தல் வெளியிடப்பட்டது முதல் 20 ஆம் திகதிக்குள் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் எனவும் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. இப்பிரச்சாரம் அரசியல் ரீதியானதாக அமைந்திருப்பினும் அதனை மக்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும் கடந்த 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமாணியில் மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பான விண்ணப்பங்கள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.