வடமேல் மாகாண ஆசிரியர் நியமன விண்ணப்பம் ரத்து
வடமேல் மாகாண பட்டதாரி மற்றும் டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
பட்டதாரி பயிலுனர்களாக நியமிக்கப்பட்டவர்களில் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்வதற்கான ஏற்பாடுகளோடு பாடசாலைகளில் இணைக்கப்படுவதற்காக இந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
எனினும், அந்த திட்டம் தொடர்பாக எழுந்த பல்வேறு சர்ச்சைகள் காரணமாக அது கைவிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
ஏற்கனவே, விண்ணப்பம் கோரப்பட்டிருந்த இணையத்தள பதிவு நீக்கப்பட்டுள்ளதோடு அவ்வாறான விண்ணப்பங்கள் எதனையும் மாகாணம் கோரவில்லை என்ற அறிவித்தலை விடுத்துள்ளனர்.