விடுமுறையின் பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கும் நடைமுறையில் மாற்றம் வேண்டும்

எதிர்வரும் 07 ம் திகதி திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு சகல வகுப்புக்களும் இடையூறின்றி ஒரே தடவையில் நடாத்தப்பட வேண்டும் என
இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கல்வியமைச்சை கோரியுள்ளது.

இதுபற்றி மேற்படி சங்கச் செயலாளரும்
ஓய்வு பெற்ற கல்வி பணிப்பாளருமான
ஏ.எல்.முகம்மட் முக்தார் விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கொரோனா பெருந்தொற்று காரணமாக
பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஓரளவு சீர் செய்யப்பட்டு வருகையில் எரிபொருள் தட்டுப்பாட்டை காரணம் காட்டி பாடசாலைகளில் வகுப்புக்களை பிரித்து நடாத்துவதன் மூலம் மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் மீண்டும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

கொரோனா காலத்தின் பாதிப்புக்களால்
இழந்த கல்வியை மாணவர்கள் இனமும்
ஈடுசெய்ய முடியாமலும் வகுப்பேற்றம்
நடைபெறாமலும் மாணவர்கள் பல்வேறு
மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்
என்பதை கல்வி அமைச்சு அதிகாரிகள்
கவனத்திற் கொள்ளவில்லை என்பது
கவலைக்குரியதாகும்.

தற்போது கல்வி அமைச்சு சகல பாடசாலைகள் நடாத்தப்பட வேண்டிய முறைபற்றி சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக ஒரு வகுப்பில் , 20 க்கு குறைவாக மாணவர்கள் இருப்பின் தினசரி அவ்வகுப்புக்கள் இடம்பெற வேண்டும் எனவும்

ஒரு வகுப்பில் 21 முதல் 40 வரையான மாணவர்கள் இருப்பின் அவர்களை இரு குழுக்களாக பிரித்து வாரத்திற்கு ஒரு குழு வீதமும்

40 க்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரு வகுப்பில் இருப்பின் அவர்களை மூன்று குழுக்களாக பிரித்து பொருத்தமான ஏற்பாட்டுடன் வகுப்புக்களை நடாத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர். பேராசிரியர். கபில.சி.பெரேரா
வின் ஒப்பத்துடன் வெளியிடப்பட்ட கல்விச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!