வெள்ளத்தின் காரணமாக பரீட்சை பாதிப்பு
புத்தளத்தில் இன்று (24) காலை பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் புனித அன்ட்ரூ பரீட்சை நிலையத்தின் பணிகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
அனைத்து பரீட்சை மண்டபங்களும் நனைந்து இருப்பதால் பரீட்சையைத் தாமதப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
143 படையணியினர் பரீட்சையை வேறு மண்டபத்திற்கு மாற்றினர். புத்தளம் நகரில் கடும் மழை பெய்து வருவதால், அப்பகுதியில் உள்ள பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மழை காரணமாக புத்தளத்தில் மின்சார விநியோகமும் தடைபட்டுள்ளதுடன், பல பரீட்சை நிலையங்களின் மின்விளக்குகளும் மங்கலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.