அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கான தரவுத்தளத்தினை ஒன்லைன் ஊடாக பதிவு செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்யும் வேலைகள் கடந்த 2012ம் ஆண்டு தொடக்கம் மாவட்ட செயலகத்தினால் வினியோகிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டன. இந்நடைமுறையில் காணப்பட்ட பல்வேறு சிரமங்களைக் கருத்தில் கொண்டு இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இம்முறையினூடாக மாவட்டத்தின் வேலையற்ற பட்டதாரிகள் தரவுத்தளத்தினை செயற்படுத்துவதை நோக்காகக் கருதி எதிர்வரும் காலங்களில் இப்பதிவை ஒன்லைன் ஊடாக மாத்திரம் செய்தல் வேண்டுமென்பதுடன் மாவட்ட செயலகத்தில் இதுவரையில் பதிவு செய்துள்ளவர்களும் மீண்டும் இம் முறையினூடாக பதிவு செய்தல் வேண்டுமெனவும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதேச செயலாளர்களிடம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். (தினகரன்)