அரச சேவையின் தேவையின் பொருட்டு நடாத்தப்படும் பாடநெறிகளில் வெளிநாட்டு கல்விச் சுற்றுலா மற்றும் துறை சார் சுற்றுலாக்களை நீக்கி, பாடநெறியை மீளத் தயாரிக்குமாறும் அதற்குற்ப நிதித் திட்டமிலை மேற்கொள்ளுமாறும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல தெரிவித்துள்ளார்.
தேசிய வரவு செலவு சுற்றுநிருப இலக்கம் 5/2020 இன் கீழ் 2021-2023 வருடாந்த வரவுசெலவு திட்டம் தயாரித்தல் தொடர்பான வழிகாட்டல் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருப்பதிலேயே இதனை செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்கள், திணைக்களங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டடுள்ள இச் சுற்று நிருபத்தில், அரச சேவையின் குறித்த துறையுடன் நேரடியாகத் தேவைப்படும் பாடநெறிகள் மற்றும் அதிகாரிகளின் துறையுடன் நேரடியாக தொடர்புபட்ட பயிற்சி மற்றும் பாடநெறிகளுக்கு மாத்திரம் வரையறுக்கும் வகையில் வாண்மை விருத்தி செயற்றிட்டங்களுக்கான செலவீன ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறும் அவர் வேண்டிக் கொண்டுள்ளார்.