இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை – அடிப்படையான தகவல்கள்
1.7.2020 அன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பிரமாணக் குறிப்பின் முக்கியமான அம்சங்களை நோக்குவோம்.
இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை 2ம் வகுப்பு, 1ம் வகுப்பு என இரண்டு தரங்களைக் கொண்டிருக்கும்
சம்பள குறியீட்டு இலக்கம் – ஜீஈ.3-2016
சம்பள அளவுத்திட்டம் – ரூ 34615 – 3x 680 – 7x 1335 – 20 x 1400 = 74000.00
இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவைக்கு உள்ளீர்க்கப்படும் எண்ணிக்கை 4471
இப்பதவிக்கு திறந்த மற்றும் திறமை அடிப்படையிலான உள்ளீர்ப்பு இடம்பெறாது. 100 வீதம் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளீர்ப்பு இடம்பெறும்
வகுப்பு 2 க்கான ஆட்சேர்ப்பு முறை
போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டு ஆட்சேர்ப்பு இடம்பெறும்
தகைமை – இலங்கை ஆசிரியர் சேவையின் வகுப்பு 1 அல்லது 2-1
போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான கல்வித் தகைமை
1. குறித்த பாடம் தொடர்பான பட்டம்
அல்லது
2. குறிப்பிட்ட பாடம் தொடர்பான ஆசிரயர் பயிற்சிச் சான்றிதழ் அல்லது போதனாவியல் டிப்ளோமா
அல்லது
(சில பாடங்களுக்கு விசேட விளக்கங்கள் உண்டு)
அனுபவம் – இலங்கை ஆசிரியர் சேவையின் 10 வருட அனுபவம்
மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு மூன்று தடவைகள் மாத்திரமே தோற்ற முடியும்.
பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு நேர்முகப்பரீட்சை நடைபெறும்
இரண்டாம் வகுப்பில் இருந்து 1 வகுப்பிற்கு தரம் உயர்த்தல்
பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைகள் :
1. பதவியூயர்வூக்கு தகுதிபெறும் தினத்திற்கு சேவையில் 2 ஆம் வகுப்பில் குறைந்த பட்சம் 10 வருட செயலூக்கமுள்ள சேவைக் காலத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டியதுடன் பத்து (10) சம்பள ஏற்றங்களை பெற்றிருத்தல் வேண்டும்.
2. முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சையில் குறிப்பிட்ட தினத்தில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
3. அனுமதிக்கப்பட்ட செயலாற்றுகை மதிப்பீட்டுத் திட்டத்தின் படி பதவியூயர்வூத் தினத்திற்கு உடன் முன்னரான 10 ஆண்டுகளில் திருப்திகரமான மட்டத்தில் அல்லது அதற்கு மேலான செயலாற்றுகை
அடைவூ மட்டத்தை காட்டியிருத்தல் வேண்டும்.
4. அராங்க சேவை ஆணைக்குழு சுற்றறிக்கை இல. 01ஃ2020 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய ஒழுக்காற்றுத் தண்டனையொன்றுக்கு உட்படாத ஒருவராக இருத்தல்
5. இணைப்பு மொழியில் தேர்ச்சி பெற்றிருத்தல்.
6. வேறு அரசகரும மொழியில் தேர்ச்சி பெற்றிருத்தல் அல்லது அதில் விடுவிக்கப்பட்டிருத்தல்
மேலதிக விபரங்களை பார்க்க
ஆசிரியர் சேவையில் தரம் 1இல் அதிக காலம் சேவையில் ஈடுபட்டு, தற்போதைய ஆசிரியர் ஆலோசகர் சேவையில் ஈடுபடக்கூடியவர்கள் I S A சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டால் சம்பள ஏற்றத்தாழ்வு கள் ஏதும் இடம்பெற வாய்ப்பு உள்ளதா? இது தொடர்பாக பூரண விளக்கம் தர முடியுமா?
இதேபோல் தான் அதிபர் சேவைக்கு உள்வாங்கப்பட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.