உளவளத்துணை ஆசிரியர்களுக்கான நியமனங்கள்

 

உளவளத்துணை ஆசிரியர்களுக்கான நியமனங்களை வடமேல் மாகாணம் நேற்று வழங்கியுள்ளது. 

சிங்கள மொழி மூலம் 274 ஆசிரியர்களும் தமிழ் மொழி மூலம் 12 ஆசிரியர்களும் நியமனம்  பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இந்நியமனங்களின் அடிப்படையில் சேவையாற்ற வேண்டிய பாடசாலையில் நிலைப்படுத்தல் மே மாதம் 03 ஆம் திகதியே இடம்பெறும் என்றும் அதற்கான கடிதங்கள் ஏப்ரல் இறுதி வாரத்தில் அனுப்பப்படும் என்றும் நியமனதாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது. 

நியமனம் பெற்றவர்களுக்கு ஏப்ரல் 28 ஆம் திகதியளவில் நிலைப்படுத்தல் கடிதம் கிடைக்க வில்லையாயின் மேல் மாகாண முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!