க.பொ.த உயர் தரப் பரீட்சை ஒக்டோபரில் நடைபெறும் என்பது உறுதியாகத் தெரியவில்லை
குறிப்பு: இது ஒரு செய்தியே தவிர, உத்தியோகபூர்வ தீர்மானமல்ல என்பதைக் கவனிக்க.
க.பொ.த. உயர் தரப் பரீட்சையை ஒக்டோபர் மாதம் நடத்துவது குறித்து கல்வி அமைச்சருடன் கலந்துரையாடப்பட்ட போதிலும், அது குறித்து திட்டவட்டமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
நேற்று தெரண தொலைக்காட்சியின் பிக் போகஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தர். அப்போது, உயர் தரப் பரீட்சைகள் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு விடையளித்த அவர் அது தொடர்பாக உறுதியான தீர்மானம் எட்டடப்படவில்லை என்று தெரிவித்தார்.
தற்போதுள்ள கோவிட் தொற்றுநோயுடன் பரீட்சைகளை நடத்த முடியாது என்றும், பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்கு மேலும் கற்பித்தல் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஒன்லைன் கல்வியில் ஈடுபடும் மாணவர்களின் துல்லியமான தகவல்கள் தர மேம்பாட்டுப் பிரிவு மற்றும் கல்வி அமைச்சின் தகவல் தொழில்நுட்பப் பிரிவிலிருந்து பெறப்படுகின்றன என்றும் மேலதிக செயலாளர் மேலும் தெரிவித்தார்.