சுரக்ஸா காப்புறுதிக்கான புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுக்களின் காரணமாக தடைப்பட்டிருந்து சுரக்ஸாக் கொடுப்பனவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இம்முறை அலியான்ஸ் காப்புறுதி நிறுவனம் காப்புறுதியாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை காப்புறுதித் கூட்டுத்தாபனம் ஒப்பந்தத்தை ரத்துச் செய்தமையை அடுத்து சுகர்ஷா காப்புறுதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுரக்ஸா காப்புறுதியினை இந்த வருடத்தில் வழங்குவதற்கான ஒப்பந்தம் கல்வியமைச்சில் அதன் செயலாளர் நிஹால் ரணசிங்கவும் அலியான்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் சார்பில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் சுரேகா அலஸ் ஆகியோரும் கைச்சாத்திட்டனர்.
கடந்த வருடம் முதலாம் திகதி தொடக்கம் இந்த வருடம் நவம்பர் 30ஆம் திகதி வரையில் சுரக்ஸா காப்புறுதிக் கொடுப்பனவுகளை வழங்க அலியான்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இணக்கம் தெரிவித்துள்ளது.