பாடசாலைகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ள பாடநூல்களை எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகம் செய்யுமூறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவித்துள்ளது.
ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் கோட்டத்திற்கு அல்லது வலயத்திற்கு அல்லது 0112784815 பெக்ஸ் இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, முதல் இரு வாரங்களுக்கு மீட்டல் செய்யுமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தப்பட்டதை அடுத்து பல அதிபர்கள் பாடநூல்களை வினியோகிக்காது இருந்துள்ளதாக தமக்கு அறியக் கிடைத்துள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எனினும் பாடநூல்களை வினியோகிக்காது இருப்பதற்கு எந்த ஒரு காரணமும் செல்லுபடியாகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.