தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை நிறுத்துவதற்கு தாம் ஆதவு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
இன்று 20 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற சிறுவர்களைப் பாதுகாப்போம் எனும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பரீட்சையாக மாறக் கூடாது என்றும் பிள்ளைகள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் குறித்து அனைவரும் கவனம் குவிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஐநா சிறுவர் சமவாயத்தில் குறிப்பிடப்பட்ட கடமைகள் உரிமைகளை நிறைவேற்ற தாம் முன்னிற்பதாக தெரிவித்த ஜனாதிபதி எதிர்கால பரம்பரையின் சுபீட்சத்திற்கு தாம் பங்களிப்பதாவும் அவர் உறுதிப்படுத்தினார்.