தர்மாசார்ய பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கான நேர்முக பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் மத விடயதானங்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் தர்மாசார்ய பரீட்சையில் சித்திபெற்றவர்களை இலங்கை ஆசிரியர் சேவையின் 3-II வகுப்புக்கு இணைத்துக்கொள்வதற்காக 2020-02-24 முதல் 2020-03-02 வரை நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டிருந்தது.
அதற்கான அழைப்புக்கடிதங்கள் சிலருக்கு அனுப்ப்பட்டிருந்தன.
எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் குறித்த நேர்முகத் தேர்வு பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நேர்முக பரீட்சை நடத்தப்படும் திகதி பிறகு அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.