தேசிய கல்வியல் கல்லூரி அனுமதியில் ஆரம்பக் கல்விக்கான
துறைசார்ஒதுக்கீடு
– சேரா –
தேசிய கல்வியல் கல்லூரிகளில் ஆரம்பக் கல்வியினை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்களிடையே பல வினாக்கள் எழுகின்றன. அதாவது, ஆரம்பக் கல்வியினை
யார் யார் தெரிவு செய்யலாம் என்பதே.
01.கலைத் துறையை சேர்ந்தவர்கள்
யாவருமா? அல்லது ,
02.கலைத் துறையில் தமிழ் மொழியை தேர்வு செய்தவர்கள் மட்டுமா? அல்லது ,
03.எல்லாத் துறையினருமா ? அல்லது ,
04.கலை தவிர்ந்த ஏனைய துறையை சேர்ந்தவர்கள் தேர்வு செய்ய முடியாதா? என்பதே ஆகும் .
இத்தகய ஐயப்பாடுகள் எழக் காரணம், எல்லோரிடத்திலும் வர்த்தமானி அறிவிப்பு முறையாக சென்றடைவதில்லை என்பதோடு,
மேலும் ஏனைய கற்கைகள் போல் ஆரம்பக்கல்வி என்ற ஒரு கற்கை க .பொ .த .(சா .த ) லோ அல்லது (உ .த )லோ
பாடமாக இருப்பதில்லை என்பதாலாகும்.
எனவே இதனை தெழிவுபடுத்துவதாக இவ்விளக்கம் அமையலாம். மேலும், ஆரபக்கல்விக்கான கல்வியல் கல்லூரிக்கான அனுமதியானது, பின்வரும்
நடைமுறையில் பின்பற்றப்படுகின்றன.
01.க . பொ . த . (உ . த )ல் கலைப் பிரிவில் இருந்து 70% மாணவர்கள் தேர்வு செய்யப்
படுகின்றனர். இவர்களில் ,
i . க .பொ .த .(உ . த )ல் கலைப்பிரிவில் தமிழ் மொழியை ஒரு பாடமாக கொண்டவர்களில் 60% மாணவர்களும் ,
ii . க .பொ .த .(உ .த )ல் தமிழ் மொழியை தொடராத கலைப்பிரிவில் தோற்றிய வர்களில் 10% மாணவர்களும்,தேர்வுசெய்யப்
படுகின்றனர்.
02. ஏனைய 30% மாணவர்களும் ஏனைய துறைகளிருந்து தெரிவு செய்யப்படு கின்றனர். அதாவது,
i . வர்த்தகம்
ii . விஞ்ஞானம் (உயிரியல் / பௌதீகவியல்)
iii . தொழில்நுட்பம்(பொறியியல் / உயிர்முறமை)
மேலும் இத்தகைமைகளோடு க .பொ .த .(சா .த )ல் 06 பாடங்களில் சித்தியோடு, இதில் தமிழ் மொழி , கணிதம் , ஆங்கிலம்
ஆகிய பாடங்களில் திறமைச்சித்தி உள்ளடங்கலாக எதிர் பார்க்கப்படுகின்றன.
உங்கள் ,
– சேரா –