தொழிநுட்ப வியல் துறையில் புதிய கலைமானி பாடநெறி ஒன்றை ஆரம்பிப்பதற்கு தேசிய கல்வி நிறுவகம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
குளியாப்பிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் தொழிநுட்பவியலுக்கான தேசிய கல்வியியல் கல்லூரி யில் இப்பாடநெறியை ஆரம்பித்து நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு இப்பாடநெறியை ஆரம்பிக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை தற்போது உயர் தரத்தில் தொழிநுட்பவியல் பாடநெறியை தொடர்ந்து சித்தியடைந்தவர்களுக்கு இப்பாடநெறியைத் தொடர உள்வாங்கப்படவுள்ளனர்.
கொரிய பல்கலைக்கழக வளவாளர்களின் பங்குபற்றுதலோடு வடிவமைக்கப்பட்ட இப்பாடநெறிக்கான பாடத்திட்டம் அண்மையில் நடைபெற்ற கல்வி சார் சபையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.