நாளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. புதிய வருடம் ஆரம்பித்துள்ள போதிலும் மாணவர்கள் கடந்த வருடம் கற்ற வருடத்திலேயே இவ்வருடத்தின் ஆரம்ப 4 மாதங்களும் கற்பர்.
கொரோனா தொற்று தொடர்பான ஏற்பாடுகளின் கீழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்ப வேண்டும் என்ற அடிப்படையில் பின்வரும் தகவல்கள் முக்கியமானவை
மாணவர்கள் பகுதி பகுதியாகவே தொடர்ந்தும் அழைக்கப்படுவர்
மாணவர்கள் பகுதி பகுதியாகவே தொடர்ந்தும் அழைக்கப்படுவர். அவர்களில் வாரம் அல்லது தினங்கள் பிரிக்கப்பட்ட வகையிலேயே தொடர்ந்து அழைக்கப்படுவர் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
எனினும் இந்நடைமுறையை மாற்றி, விரைவில் அனைத்து மாணவர்களையும் ஒரே தடவையில் அனுமதிக்கும் முறையை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அதற்கான அனுமதியை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களிடம் கோரியுள்ளதாகவும் அதற்கான அனுமதி கிடைத்தவுடன் அனைத்து மாணவர்களும் அழைக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் வருகையை தொடந்தும் பழைய வகுப்புக்கான இடாப்பிலேயே பதிவு செய்ய வேண்டும்
எனினும் ஆசிரியர்கள் அனைவரும் கடமைகளுக்குச் சமூகளிக்க வேண்டும். ஏற்கனவே பொது நிர்வாக அமைச்சு விடுத்திருந்த அறிவத்தலின் சலுகைகள், கடந்த இரு நாட்களுக்கு முன்னர் விடுத்திருந்த அறிவித்தலின் மூலம் ரத்துச் செய்யப்பட்டிருந்தன.
எனவே, பழைய அறிவித்தலின் படி, கல்வி அமைச்சு விடுத்திருந்த அறிவித்தலும் ரத்தாகிவிடுவதுடன், புதிய அறிவித்தலை கல்வி அமைச்சு விடுக்கலாம் என எதிர்பார்க்கலாம்.
எனினும், பொதுவான நிர்வாக ஒழுங்கின் படி, கொரோனா கால சலுகை வழங்கும் அனைத்து சுற்றுநிருபங்களும் ரத்துச் செய்யப்பட்டு, வழமை போல பொது ஊழியர்கள் கடமைக்கு சமூகளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமையால், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் கடமைகளுக்கு சமூகளிக்க வேண்டும்.