பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் தற்பொழுது படிப்படியாக வழமை நிலைக்கு திரும்புவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை நேற்று விடுத்துள்ள கல்வி அமைச்சு நேற்றைய தினம் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டின் 9 மாகாணங்களின் நேற்றைய தினத்தில் ஆகக்கூடுதலான மாணவர்கள் வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளனர். இது 60 சதவீதமாகும்.
ஊவா மாகாணத்தில் நேற்றை தினத்தில் மாணவர்களின் வருகை 46.47 சதவீதமாகும். கிழக்கு மத்திய சப்பிரகமுவ தெற்கு வடமத்திய ஊவா மாகாணங்களின் மாணவர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்துக்கு அதிகமாகும்.
இதே வேளை மேல் மாகாண பாடசாலைகளின் மாணவர்களின் வருகை நேற்றைய தினம் 13 சதவீதமாக காணப்பட்டது. இருப்பினும் கடந்த இரு தினங்களையும் ஒப்பிடுகையில் இது அதிகமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
GID