தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சு
தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம்
விளையாட்டு டிப்ளோமா பாடநெறி -2019
தொலைத்தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் உள்ள தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தினால் சிங்கள மொழிமூலம் நடாத்தப்படும் விளையாட்டு டிப்ளோமா பாடநெறியினைப் பயிலுவதற்காக வயது 18-35 (அரசாங்க சேவையில் பணியாற்றுவோரின் வயது 45 வருடங்களினை விட மேற்படாது இருத்தல் வேண்டும்) வருடங்களுக்கு இடைப்பட்ட தகைமைகளைக் கொண்ட விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1. கல்வி மற்றும் ஏனைய தகைமைகள்:
1.1 கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரம்) பரீட்சையில் சிங்களம்/ தமிழ் மொழி, மற்றும் கணிதம்/ எண்கணிதம் ஆகிய பாடங்கள் உள்ளடங்களாக இரு அமர்வூகளுக்கு மேற்படாது 6 பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன் அவற்றில் 3 பாடங்களில் திறமைச்சித்திகளைப் பெற்றிருத்தில் வேண்டும்.
மேலும், அவர்;,
(அ) ஏற்றுக்கொள்ளப்பட்ட விளையாட்டு அல்லது உடற்கல்வி தொடர்பான கல்லூரி ஒன்றில் ஆகக் குறைந்தது 06 மாத பாடநெறி ஒன்றினை வெற்றிகரமாகப் பூரணப்படுத்தியிருத்தல்.
அல்லது
(ஆ) முப்படைகள், பொலிஸ் அல்லது சிவில் பாதுகாப்புப் பிரிவின் பயிற்சி வழங்கும் நிறுவனமொன்றில், கல்லூரியில் விளையாட்டு அல்லது உடற்கல்வி தொடர்பான பாடநெறி ஒன்றினை வெற்றிகரமாகப் பூரணப்படுத்தியிருத்தல்.
அல்லது
(இ) பாடசாலை விளையாட்டு ஆசிரியராக அல்லது ஆசிரியையாக அல்லது உள்~ராட்சி நிறுவனம் ஒன்றில் விளையாட்டு நில ஆலோசகராக ஆகக் குறைந்தது 05 வருட அனுபவத்துடன் விளையாட்டுத்துறையில் விசேட ஆற்றல்களை வெளிக்காட்டியிருத்தல்.
அல்லது
(ஈ) யாதேனும் விளையாட்டு தொடர்பாக தேசிய விளையாட்டுக் குழுவொன்றின் அங்கத்தவராக இருக்க வேண்டியதுடன் யாதேனும் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றியிருத்தல்.
அல்லது
(எ) விளையாட்டு அமைச்சினால் நடாத்தப்படும் தேசிய விளையாட்டுப் பெருவிழாவின் மாவட்ட மட்டப் போட்டியொன்றில் முதலாம் அல்லது இரண்டாம் இடத்தைப் பெற்றிருத்தல்இ அவ்வாறு இல்லாவிடின் தேசிய விளையாட்டுச் சங்கமொன்றினால் நடாத்தப்படும் தேசிய மட்டப் போட்டியொன்றில் முதலாம்இ இரண்டாம் அல்லது மூன்றாம் இடத்தைப் பெற்றிருத்தல்.