புதிய தெற்காசிய சாதனையை பதிவு செய்த யுபுன் அபேகோன்

இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகோன், ஜேர்மனியில் இடம்பெற்று வரும் சர்வதேச தடகளப் போட்டியில் புதிய தெற்காசிய சாதனையை பதிவு செய்துள்ளார்.

இப்போட்டியில் (International Athletics Meeting Anhalt 2022) 100 மீற்றர் ஓட்டத்தை 10.06 (-0.2) செக்கன்களில் கடந்த யுபுன் அபேகோன், புதிய தெற்காசிய சாதனையும், இலங்கை சாதனையையும் முறியடித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னர், 2021 மே மாதம் சவோனாவில் வைத்து 10.15 வினாடிகளில் இலங்கை மற்றும் தெற்காசிய சாதனை நேரத்தைப் யுபுன் அபேகோன் பதிவு செய்திருந்தார்.

தற்போது இடம்பெற்ற போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தில் உலகின் 8ஆவது அதிவேக மனிதர் என அறியப்படும் பெர்டினண்ட் ஓமன்யாலாவை (Ferdinand Omanyala) யுபுன் அபேகோன் வென்றுள்ளார்.

அதற்கமைய, யுபுன் அபேகோன் தனது புதிய சாதனை மூலம், இதுவரை 2022 இல் புதிய தேசிய சாதனை, தெற்காசிய சாதனையுடன் அதிவேக ஆசிய வீரர் எனும் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!