198 புள்ளிகளைப் பெற்ற கொக்குவில் மாணவன் த. கஜலக்சன்

பொறியியலாளனாக வந்து சேவை செய்வதே நோக்கம்

2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் தமிழ்செல்வன் கஜலக்சன் தமிழ் மொழி மூலம் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை இரவு பரீட்சைகள் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தமிழ்செல்வன் கஜலக்சன் 198 புள்ளிகளை பெற்றுள்ளார்.

இம்முறை யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளியாக பரீட்சைகள் திணைக்களத்தினால் 148 புள்ளிகள் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் தான் ஒரு பொறியியலாளராக வந்து மக்களுக்கு சேவையாற்றுவேன் என 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் தெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள 2021 தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் முதலிடத்தை பெற்று வந்த நிலையில் தனது சாதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

198 புள்ளிகளைப் பெற்ற கொக்குவில் மாணவன் த. கஜலக்சன்-2021 Grade 5 Scholarship Exam-Kokkuvil Student 198 Marks

நான் சூம் வகுப்பினூடாகவே எனது படிப்பினை மேற்கொண்டேன்.எனது அம்மா ஆசிரியராக கடமையாற்றுகிறார். அப்பா வியாபாரத்தை தொழிலாகக் கொண்டுள்ளார்.

எனது அம்மா மற்றும் அப்பாவின் ஊக்கமளிப்பு காரணமாகவும் எனது பாடசாலையின் வகுப்பாசிரியர் மற்றும் எனது ஆசிரியர்களின் ஊக்கத்தின் காரணமாகவே இந்த பெரு வெற்றியை என்னால் பெற முடிந்தது.

அத்தோடு எதிர்காலத்தில் நான் ஒரு பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன்” என கஜலக்சன் தெரிவித்தார்.

தினகரன்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!