சுமார் 2000 தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில்
முழு நாட்டையும் ஸ்தம்பிக்கச் செய்யும் வேலை நிறுத்தம் தொடரும் என தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது.
அனைத்து அரச, தனியார் மற்றும் அரை அரச துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 2000 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பணிப்பகிஷ்கரிப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும், இலங்கை கல்வி நிர்வாக சேவையின் அனைத்து உறுப்பினர்களும் இன்று முதல் மறு அறிவித்தல் வரையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.