விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான கல்வி
SLTS (Islam) , Dip in Social Work (Marit), NCICTT, BA(R)
ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்க்கையை நடாத்திச் செல்வதற்கு பல்வேறு தேவையுடையவர்களாக காணப்படுகின்றன. அப்படியானவர்களில் சாதாரண தேவையுடையவர்களை விட அதிக தேவையுடையவர்பளை விசேட தேவையுடையவர்கள் எனலாம்.
விஷேட தேவை உடையவர்களுக்கு (மாற்றுத் திறனுடையோர், மீத்திறனுடையோர்) கண்டறிந்து விஷேடமான முறைமைகளை பயன்படுத்தி வழங்கப்படும் கல்வியே விஷேட கல்வி ஆகும்.
அதேபோன்று இக்கல்வி முறையானது குறைபாடுகளையுடைய விசேட தேவைகளை வேண்டி நிற்கும் மாற்றுத்திறனாளிகளது ஆற்றல்களை வளர்க்க உதவுகின்ற ஒரு கல்வி முறையுமாகும்.
இதற்காக விஷேடமான கற்றல், கற்பித்தல் உபகரணங்கள், விஷேடமான கற்பித்தல் முறைகள் என்பன பயன்படுத்தப்படும் பிள்ளைகளுடைய விஷேட தேவைக்கு ஏற்ற வகையில் ஆசிரியர் கற்றல் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதன் ஊடாக விஷேட கல்வியை வழங்க முடியும்.
மாறி வருகின்ற சமூகத்தின் மாற்றங்களுக்கேற்பவும், சமகாலத் தேவைகளுக்கேற்பவும், போட்டிச் சந்தை நிலைமைகளுக்கேற்பவும் சமூகத்தின் சகல பிரிவினர்களுக்கும் சமமான கல்வி வழங்க வேண்டிய நிலை அத்தியவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு (UNESCO) அமைப்பானது கல்வி நோக்கத்தின் அடிப்படையில் 4 விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
- சகலருக்கும் கல்வி வழங்கல்
- கற்றலுக்காக கற்றல்.
- அனைவருக்கம் விஞ்ஞான கல்வியை வழங்குதல்.
- ஆரம்பக்கல்வியிலிருந்து இடைநிலைக் கல்விக்குச் செல்ல வழிவகுத்துக் கொடுத்தல்.
என்பன வாகும் இதனடிப்படையில் 1996 ஆம் ஆண்டு UNESCO அமைப்பானது நவீன உலகின் கல்விச் சிந்தனையாக கல்வியின் 4 துண்கள் என்ற அடிப்படையில் Deloe’s அறிக்கையை வெளியிட்டது. கல்வியானது. அதில்
- அறிவதற்காகக் கற்றல் (Learning to know)
- ஆற்றுவதற்காக கற்றல் (Learning to do)
- இணைந்து வாழ்வதற்காக கற்றல் (Learning to live together)
- நிலைத்திருப்பதற்காக கற்றல் (Learning to be)
சகலருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும் இன்று கல்விப்புலத்தில் முதன்மை பெறுகின்றது. குறிப்பிடத்தக்க விடயமாகும்.
விசேட தேவையுடைய பிள்ளைகள்
- உடல் சார்ந்த பிரச்சினைகளை எதிர் நோக்கும் பிள்ளைகள். (Physically Challenged)
- உளம் சார்ந்த பிரச்சினைகளை எதிர் நோக்கும் பிள்ளைகள். (Mentally Challenged)
- ஒழுக்க / நடத்தைக் கோளாறுடைய பிள்ளைகள். (Conduct / Behavior Disorders)
- கற்றல் இடர்பாடுடைய பிள்ளைகள். (Learning difficulties)
- மீத்திறன் பிள்ளைகள். (Gifted)
1. உடல் சார்ந்த பிரச்சினைகளை எதிர் நோக்கும் பிள்ளைகள். (Physically Challenged)
- பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகள்.
- கேட்டல் குறைபாடுடைய பிள்ளைகள்.
- பேச்சுக் குறைபாடுடைய பிள்ளைகள்.
- இயக்கத் தொழில்பாட்டு கோளாருடைய பிள்ளைகள்.
2. உளம் சார்ந்த பிரச்சினைகளை எதிர் நோக்கும் பிள்ளைகள். (Mentally Challenged)
- ஏதாவதொன்றைக் கற்றுக் கொள்வது மிகவும் மந்தமாக இருக்கும்.
- பரீட்சையில் ஏனையோரையும் பார்க்க குறைந்த புள்ளிகள் இருக்கும்.
- பொது அறிவு, தகவல் அறிவு குறைவு.
- ஏதாவது ஒன்றின் மீது கவனம் செலுத்துவது கடினமானது.
- விரைவாக மறத்தல் / ஞாபகம் வைத்திருக்கும் ஆற்றல் குறைவு.
- பிரச்சினை தீர்க்கும் திறன் குறைவு.
- எப்போதும் தனிமையை நாடுவார்.
- யாதேனுமொன்றை செய்வதில் விருப்பமின்மை.
- பேசுவதற்கு பயன்படுத்தும் சொற்கள் குறைவு / வரையருக்கப்பட்டது.
- மொழியை கற்றுக் கொள்வது மந்தமாக இருக்கும்.
- பொருத்தமற்ற நடத்தைக் கோலங்கள்.
3. ஒழுக்க / நடத்தைக் கோளாறுடைய பிள்ளைகள். (Conduct / Behavior Disorders)
- மூர்க்கத்தனமான பிள்ளைகளும் தனிமைப்பட்ட பிள்ளைகளும்.
- கவனக் குறைவான / அதி தொழிற்பாடுடைய பிள்ளைகள்.
- மனவெழுச்சி மிக்க பிள்ளைகள்.
4. கற்றல் இடர்பாடுடைய பிள்ளைகள். (Learning difficulties)
- முதன்மையான கற்றல் இடர்பாடு – (வீட்டில், பாடசாலையில் குறித்த ஒரு தேர்ச்சியை அடைய முடியாமை.)
- சிறப்பான கற்றல் இடர்பாடு – (எழுதுதல், வாசித்தல் போன்றன கடினம்)
5. மீத்திறன் பிள்ளைகள். (Gifted)
- நுண்மதி ஈவு 125 க்கு மேற்பட்டோர் – Burt
- நுண்மதி ஈவு 130 க்கு மேற்பட்டோர் – Lovel
- நுண்மதி ஈவு 140 க்கு மேற்பட்டோர் – Teurman
(நுண்மதி ஈவு காணும் முறை IQ=உளவயது/காலவயதுx100)
எனவே தான் ஒவ்வொரு மாணவரின் உளநிலை, விவேகஙக்கள் வேறுபட்டவையாக காணப்படுகின்றது. ஆதலால் அவர்களுடைய குறைபாடுகள், விசேட தேவைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்குப் பொருத்தமான கற்றல்-கற்பித்த்தல் செயன் முறையை மேற்கொள்ள வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரதும் தார்மீகப் பொறுப்பாக உள்ளது.
இவைகளைக் கருத்தில் கொண்டு எம்முடைய செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது போட்டி நிறைந்த உலகில் அவர்களும் சுய கௌரவத்தடன் வழ முடியும். என்பது உண்மையாகும்.
உசாத்துணை
- சந்திரசேகரம்,ப. (2004) “செவித்திறன் குறைவானோருக்குக் கற்பித்தல்” அகவிழி.
- விமலா கிருஷ்ணபிள்ளை , ”வழிகாட்டலும் ஆலோசனையும்” , சேமமடு பதிப்பகம், வவுனியா.
- கல்வி உளலியல், “NIE”, கொழும்பு.
- மன்சூர். எம்.கே.எம், (2005) “கல்வித் தத்துவம்” , பிரின்ட் இன் செலக்ஸன், அக்கரைப்பற்று.
- http://www.gettingsmart.com/
wp-content/uploads/2016/07/ Special-Education-Feature- Image.png - https://www.inamtamil.com/
vice%E1%B9%ADa-kalviyi%E1%B9% 89-mukkiyattuvamum-vi%E1%B9% 89aitti%E1%B9%9Fa%E1%B9%89a% E1%B9%89a-vice%E1%B9%ADa- kalvi-va%E1%B8%BBa%E1%B9% 85kuvatil-ni%E1%B9%9Fuva%E1% B9%89a%E1%B9%85ka%E1%B8%B7- etirko/
