விசேட தேவையுடையவர்களாயினும் வெற்றியாளர்கள்


விசேட தேவையுடையவர்களாயினும் வெற்றியாளர்கள்…………

(K.t.Brownsen)

சாதரண அல்லது சராசரியான பிள்ளைகளை விட வேறுபட்ட இயல்புகளைக் கொண்டிருக்கும் பிள்ளைகளையே நாம் விசேட கல்வித் தேவைகள் கொண்ட பிள்ளைகள் என கூறலாம். அந்த வகையில் விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட பிள்ளைகளை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.

1. புலன் சார் குறைபாடுகள்

2. உடல் மற்றும் ஆரோக்கியக் குறைபாடுடையோர்

3. அறிவுசார் குறைபாடுடையோhர்

4. நடத்தைசாhர் ஒழுங்கீனங்கள்

5. பேச்சு மற்றும் மொழிசாhர் ஒழுங்கீனங்கள்

6. மீத்திறன் மற்றும் திறமை கொண்ட மாணவர்கள்

7. கற்றல் இயலாமைகள் உள்ள மாணவர்கள்

8. ஓட்டிசம் குறைபாடுடையவர்கள்

 

உட்படுத்தல் கல்வி

உட்படுத்தல் கல்வி என்பது மாணவர்களின் கற்றல் தடைகளை குறைத்து அனைவருக்குமான கல்வி இலக்கினை அடைய வைப்பதற்கான ஒரு முறைமை ஆகும்.

உட்படுத்தல் கல்வியின் முக்கியத்துவம்

 அனைத்துப் பிள்ளைகளையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு

 மேம்பட்ட கல்விக்கான வாய்ப்பு, தொடர்பாடல் திறன் மற்றும் சமூக திறன்

 அதிக நண்பர்களின் பிணைப்பு

 சகபாடிகளின் சாதகமான தன்மை

 தனிமைப்படுத்தப்படவில்லை என்ற புத்துணர்வு

 அயற் பாடசாலைகளில் இலகுவாக கல்வியினைத் தொடர்வதற்கான வாய்ப்பு

 வேறுபாடற்ற ஒருங்கிணைந்த கல்விக்கான வாய்ப்பு

 கற்றலுக்கான அதிக ஊக்கப்படுத்தல்

 புதுவிதமான கற்றல் உத்திகளுக்கான சந்தர்ப்பம்

 

விசேட தேவையுடைய சிறுவர்களது கல்வியை பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டியவர்கள்

 அதிபர், ஆசிரியர்கள்

 வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள்

 கிராம மட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக்கள்

 கிராம சேவகர்

 விசேட தேவையுடையவர்களுடன் பணிபுரியும் அரச சார்பற்ற நிறுவனங்கள்

 சிறுவர் கழகங்கள்

 விசேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர்கள்

 

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் சலுகைகள்

1. பார்வையற்றோருக்கு பிறையில் ஊடாக வினாத்தாள்கள் வழங்கப்படுதல்.

2. அவ்வசதி இல்லாத பாடசாலைகளில் பரீட்சை நிலையங்களில் வினாத்தாள்கள் வாசிப்பதற்கு மேற்பார்வையாளர் ஒருவரை வழங்குதல்.

3. பரீட்சை எழுதுவதற்கு மேலதிகமான நேரத்தை வழங்குதல்.

4. எழுதுவதற்கு சிரமப்படும் விண்ணப்பதாரர்களுக்கு விடைகளை வாய்மொழி மூலம் வழங்குவதற்கும் அதனை ஒலிப்பதிவு செய்து அதேநேரம் வாய்மொழி மூலம் வழங்கப்படும் விடைகளை எழுதுவதற்கு விசேட மேற்பார்வையாளர் ஒருவரை நியமித்தல்.

5. சைகை மொழி மூலம் பாவிக்கப்படும் கேட்டல், பேச்சு சிரமமுடைய விண்ணப்பதாரர்களுக்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவரை வழங்குதல்.

6. வெவ்வேறு விசேட தேவை உடையவர்களுக்கும் பரீட்சை மண்டபத்திற்கு உள்வருவதற்கு பெற்றோரின் உதவியினை வழங்குதல்.

7. விசேட இயலாமைகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு மேற்பார்வையாளரின் உதவியுடன் தொடர்ந்து ஏற்படும் தேவைகளை பூர்த்தியாக்கிக் கொள்வதற்கு உதவுதல்.

8. பரீட்சை திணைக்களத்தினால் பரீட்சைக்கு முன்பு மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டுக்கு பின்பு ஒவ்வொரு விசேட தேவை வகைக்கு ஏற்ப பரீட்சைக்குரிய சலுகைகள் வழங்கப்படும்.

9. பல்கலைக்கழக ஒதுக்கீட்டில் 3 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

10. அரச வேலை வாய்ப்புக்களில் 3 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.

11. விசேட தேவையுடையவர்கள் சமூக சேவை திணைக்களத்தால் வழங்கப்படும் சகல சலுகைகளையும் பெற்றுக் கொள்ள தகுதியானவர்கள்.

 

விசேட தேவையுடையவர்களாக இருந்தாலும் வெற்றியாளர்களாக மாறிய சாதனையாளர்கள்..

ஏஞ்சலினா மகறோவா (Downs Syndrome)

நீச்சல் வீராங்கனையான இவர் டவுன்ஸ் சின்றோம் (மனநலிவு) எனும் குறைபாடுடையவர். தற்பொழுது இவர் உதைபந்தாட்டத்தில் சிறந்த வீராங்கனையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார்.

ஆல்பர்ட் ஜன்ஸ்டைன் (Autism)

பௌதிகவியலின் தந்தை என அழைக்கப்படும் ஜன்ஸ்டைன் என்பவர் ஒரு ஓட்டிசம் ( மதியிறக்கம்) எனும் விசேட தேவையுடையவராவர்.

 

டானியல் ரட்க்ளிவ் (Neurological Disorder)

ஹரிபொட்டர் திரைப்படத்தின் கதாநாயகன் நரம்பியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு செயற்திறன் குறைந்த ஒரு உலகப்புகழ் பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமாவார்.

ஸ்டீவன் ஹாக்கின்ஸ் (Motorneuron Disease)

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அண்டவியல் விஞ்ஞானியான இவர் உடம்பியக்கமற்ற ஒருவராகவே வாழ்வின் பல வருடங்களைக் கழித்துள்ளார்.

திலினி நிமேஷh (Physically Disable)

இலங்கையின் முதலாவது விசேட தேவையுடைய பட்டதாரியாக பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞான கற்கை நெறியை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார்.

எனவே நாம் அனைவரும் ஒன்றுபடுவோமாயின் விசேட தேவையுடைய எமது சிறுவர்களையும் உட்படுத்தல் கல்வியின் ஊடாக வெற்றியாளர்களாகவும், சாதனையாளர்களாகவும் மாற்ற முடியும் என்பது திண்ணம்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!