2020 க.பொ.த சாதாரண தர விசேட செயன்முறைப் பரீட்சை இன்றும் (29) நாளையும்

 

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விசேட செயன்முறைப் பரீட்சை இன்றும் (29) நாளையும் (30) நடைபெறவுள்ளது.

 கோவிட் 19 நோய்த்தொற்றின் தனிமைப்படுத்தல் காரணமாக செயன்முறைப் பரீட்சைகளுக்குத் தோன்ற முடியாத விண்ணப்பதாரர்களுக்கான ஏற்பாடாகும்.

 விசேட செயன்முறைப் பரீட்சை நாடளாவிய ரீதியில் பல நிலையங்களில் நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி  தர்மசேன தெரிவித்தார்.

 பரீட்சையில் பங்குபற்ற விரும்பும் பரீட்சார்த்திகள் வலயக் கல்வி அலுவலகத்தின் மூலம் மாகாண அழகியல் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும்.

 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

அப்போது தோற்ற முடியாமல் போனவர்களுக்கான சந்தர்ப்பம் இன்றும் நாளையும் வழங்கப்படுகிறது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!