கட்டுரை: கல்விக் கோட்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும்

Teachmore
வினைத்திறனுள்ள இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் வழிவகைகள்
கல்வி என்றால் மனிதனது அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாகும். இன்று நாட்டிலுள்ள கல்வி முறை பல்வகைமைப்பட்டு இருப்பதைக் காணலாம். ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி,பொதுக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, வளந்தோர் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர் கல்வி என பலவாறு அவற்றை இனங்காணலாம்.
இலங்கையில் அரசாங்கப் பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் கடந்த 80 வருடங்களாக இலவசக் கல்வியையே வழங்கி வருகின்றன. அத்துடன் புலமைப் பரிசில், மகாபொல வசதிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
அது மட்டுமன்றி இலவச பாடநூல், இலவச சீருடை, பாதணிகள் போன்றன வவுச்சர் முறையின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.இவ்வாறாக ஏழை, பணக்கார பேதமின்றி அனைவருக்கு வழங்கியும் இலங்கை கல்வியானது பல சவால்களுக்கு முகங்கொடுப்பதனை இனங் காணலாம்.
கல்வி முறைமையில் காணப்படும் சவாலாக அரசின் நிதி ஒதுக்கீட்டுப் பிரச்சினை காணப்படுகிறது. அரசாங்கம் இன்று பெருமளவு நிதியை கல்விக்காக ஒதுக்குகின்றது.
இன்று மிகவும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் வருடத்திற்கு 4000 கோடி கல்விக்காக ஒதுக்கப்படுகிறது. பெற்றோர் கல்வியில் பின்தங்கியிருத்தல், பிள்ளைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்தாமை, பிள்ளைகள் பாடசாலைக்கு தவறாமல் செல்வதில் பெற்றோரின் கவனமின்மை
போன்றவையே மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளித்தலில் உள்ள ஒழுங்கின்மையாகும். அத்துடன் மாணவர்களின் குடும்ப சூழல் முக்கிய காரணியாகும். குறிப்பாக தாய் வெளிநாட்டில் பணிபுரிதல் காரணமாக மாணர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
படிப்பிற்கேற்ற தொழிலின்மை, ஊதியமின்மை போன்றன தற்கால கல்வி உலகு எதிர்நோக்கும்
சவாலாகும். இன்று மாணவர்கள் தங்களை கல்வியில் அர்ப்பணித்தும் எதிர்காலத்திற்கான வேலை
வாய்ப்பினை முறையாக பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளனர்.பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் வேலையின்றி அலைய வேண்டியுள்ளது. இது
தொழில் உலகிற்கும் கல்வி உலகிற்கும் இடையில் உள்ள இணக்கமின்மையாகும். ஆகவே,
தொழிற்கல்வியினை பெற்றுத் தரக் கூடிய கற்கை நெறிகளை பல்கலைக்கழகங்களில் அமுல்படுத்துவதால் இப்பிரச்சினையை குறைத்துக் கொள்ள முடியும். காலம் மாறவே கல்விக்கான கொள்கைகளும் மாற்றம் பெற வேண்டும். இலங்கையில் கல்வித் திட்டமானது 08 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றமடைகின்றது. இதனூடாக தேவையானவை கருத்திற் கொள்ளப்பட வேண்டும். அத்துடன் இலங்கையின் கல்வி முறையானது நூற்கல்வியினை மையமாகக் கொண்டது.
பொருளாதார நெருக்கடியானது வறிய மக்களின் கல்வித் தரத்தை பின்னடைவான நிலைக்கு
தள்ளி விடுகின்றது. பொருட்களின் விலையேற்றம் காரணமாக வறிய குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் தமது பிள்ளைகளை இடைநிறுத்தம் செய்வதால் ஊக்கமுடைய திறமையான மாணவர்கள் அறிவு ரீதியில் முடக்கப்பட்டு அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது.
இன்றைய காலத்தில் தொழில் வாய்ப்பிற்கான விண்ணப்பப் படிவம் பூரணப்படுத்துவதற்குக் கூட ஆங்கில மொழி அறிவு அவசியமாகும்.பாடசாலை, பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், வேலைத்தளங்கள் போன்ற சகல இடங்களிலும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கில மொழி அறிவின்மையினால் தொழில் வாய்ப்பை, சகல பாடங்களிலும் திறமையுள்ளவன் இழக்கின்றான். இன்றைய காலத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் ஆங்கிலத்தில் C சித்தி அவசியமாகும். ஆகவே, இதனை மாணவர்கள் அறிந்து தேர்ச்சி பெறவதற்காகவே 6-_11 வரையான தரங்களில் ஆங்கிலப் பாடம் கட்டாய பாடங்களில் ஒன்றாக உள்ளது. அனைவரும் ஆங்கில மொழியறிவைப் பெறுவது அவசியமானதாகும்.
உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் பல்கலைக்கழகம் கிடைத்தும்
அதற்கான சுமார் 1 வருடம் காத்திருந்து, பின்பு அதில் சிறந்த கற்கை நெறியினை குறைந்தது 3 வருடங்கள் நிறைவு செய்த பின்னர் தொழில் வாய்ப்பிற்காக சுமார் 1 வருடம் காத்திருக்க வேண்டும். இதனால், வயது முதிர்ந்த நிலையிலேயே பட்டங்களைப் பெற்று தொழில்
வாய்ப்பினை தேடும் அவலநிலைக்கு இன்றைய திறமைமிக்க மாணவர் சமுதாயம் தள்ளப்பட்டிருக்கின்றது.
பரீட்சை வினாத்தாள்கள் மொழி மாற்றம் செய்யப்படும் போது பிள்ளைகளுக்கு ஏற்படும் சிக்கல்களும் இன்றைய கல்வி எதிர்நோக்கும் சவாலாகும். இவற்றை பொதுவாக 5ம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த(சா/தர), க.பொ.த(உயர்/தர) ஆகிய பரீட்சைகளில் காணலாம்.
தகவல் தொடர்பாடல் அறிவின்மை, சர்வதேச நிறுவனங்கள் கல்வியில் ஆதிக்கத்தை செலுத்துதல் (உலக வங்கி) யுத்தம், இயற்கை அனர்த்தம் போன்றவற்றின் விளைவுகள் கல்வி வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகின்றன.
இலங்கையின் கல்வி முறையில் காணப்படும் சமகாலப் பிரச்சினைகள் ஏராளமானவை. இவற்றைத் தவிர்க்கும் முகமாக அரசும், ஆசிரியர்களும், மாணவர்களும் இயன்ற அளவு தம்மை வளப்படுத்தி கல்வியில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இன்றைய மாணவ சமுதாயம் எதிர்கொள்ளும் சவாலாகும்.
கல்விக் கோட்பாடுகள் மாற்றங்களுக்கு உள்ளாகும் போதே வினைத்திறனான இளைஞர், மாணவ சமுதாயத்தினை உருவாக்க முடியும். இதனூடாக சிறந்த எதிர்காலத்தினை தொழிற்கல்வியுடன் பெற்றுக் கொள்ளலாம்.
றிஸ்வான் ஜுஸ்லா
(2ம் வருடம் கல்வி
பிள்ளைநலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்)
(thinakaran)
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!