2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போடுமாறு கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது

 

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போடுமாறு கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி பொதுநல ஆர்வலர் நாகாநந்த கொடித்துவக்குவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது.

 இந்த மனு தொடர்பில் கருத்து தெரிவித்த கொடித்துவக்கு, பரீட்சையை நடத்துவது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அதற்கு எதிராக இந்த மனுவை தாக்கல் செய்ததாக அவர் தெரிவித்தார்..

 கடந்த வருடத்தில் மட்டும் பாடசாலை மாணவர்களால் ஏற்பட்ட கற்றல் இழப்பை நிவர்த்தி செய்யுமாறு கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!