21 ஆம் திகதி பாடசாலை வராதவர்களுக்கான நவம்பர் மாத சம்பளத்தை நிறுத்த ஏற்பாடு
வடமேல் மாகாணப் பாடசாலைகளில் 21 ஆம் திகதி பாடசாலை வராத ஆசிரியர்களின் நவம்பர் மாத சம்பளத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிப்பதாக வடமேல் மாகாண ஆளுனர் ராஜா கொல்லுரெ தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மிக பழமையான சோசலிச கட்சியான இலங்கை கொமியுனிஸ்ட் கட்சின் ஸ்தாபகரான அவர், வடமேல் மாகாண ஆளுனராக கடமையாற்றிவருகிறார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், மாகாண ஆளுனரின் அதிகாரங்களைப் பயன்படுத்தி நவம்பர் மாத சம்பளத்தை நிறுது்துவது குறித்து ஆராய்வதாகத் தெரிவித்தார்.
அத்தோடு 25 ஆம் திகதி பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் குற்றச் செயல்கள் செய்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.