கல்வித் துறையினருக்கு இரண்டு நாட்கள் விசேட விடுமுறை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அரச ஊழியர்களைக் கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கான அரச நிர்வாக சுற்றறிக்கையின் படி, அரச ஊழியர்கள் கடமைக்கு அழைப்பதற்கான விசேட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

திணைக்கத்தின், நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இத்தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை குறித்த சுற்றுநிருபம் வழங்கியுள்ளது.

இதன் படி, கல்வி அமைச்சின் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு இரண்டு நாட்கள் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டலில், திங்கட் கிழமை மற்றும் ஏனைய இரு தினங்கள் கடமைக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. இது மாகாண, வலயங்களில் கடமையாற்றுபவர்களுக்கம் அமுலாகும் வகையில் கல்வி அமைச்சு இதனை அமுல்படுத்துகிறது.

இதே நேரம் தேசிய கல்வி நிறுவகம் உட்பட கல்வி அமைச்சின் ஏனைய நிறுவகங்கள் திணைக்களங்களிலும் இவ்வாறு மூன்று நாட்கள் மாத்திரம் கடமைக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பாடசாலைகள் தொடர்பாக எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!