5000 ரூபா கிடை க்காத மாகாணங்களுக்கு விசேட ஏற்பாட்டில் வழங்க நடவடிக்கை
கிழக்கு மாகாண ஆசிரியர்,அதிபர்களுக்கு இம்முறை 5,000/= படி வழங்காமை தவறுதலாக நடந்ததாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மூன்று மாகாணங்களின் ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பள விபரப் பட்டியலில் 5000 ரூபா குறிப்பிடப்பட்டாலும் கைக்கு கிடைக்கவில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை வலயக் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு பிரதான ஊடகங்கள் ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு இல்லை என செய்தி வெளியிட்டன.
எனினும் கல்வி அமைச்சர் இதனை மறுத்துள்ளதோடு அனைத்து ஆசிரியர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு கிடைக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
அதே நேரம் 5000 ரூபா கிடைக்காத மாகாணங்களின் ஆசிரியர்களுக்கு விசேட சம்பள ஒப்ப பட்டியல் மூலம் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.