33 இலட்சம் குடும்பங்களுக்கு அரசாங்க நிவாரண உதவி

ரூபா 5,000 முதல் 7500 வரை நிதியுதவி வழங்க தீர்மானம்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் ஆகியோருக்கு வேலைத்திட்டம் நடைமுறை

பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் உதவி தேவையான 33 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் இம்மாதம் முதல் எதிர்வரும் இரு மாதங்களுக்கு 5000 முதல் 7500 ரூபா வரை நிதியுதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.இதன்படி 17 இலட்சத்து 65 000 சமுர்த்தி பெறுனர் குடும்பங்கள், 730 000 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளர்கள் உட்பட 33 இலட்சம் பேர் பயனடையும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. முதல் கட்டமாக அடுத்த வாரம் மே மாத உதவித்தொகையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி பயனாளிகளுக்கு மூன்று மாத காலத்திற்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. பிரதமர் அலுவலகம் மற்றும் நிதி அமைச்சின் பணிப்புரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தை வழிநடத்துவதில் சமுர்த்தி அமைச்சும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் பாரிய பங்காற்றுகின்றன. 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!