கோவிட் பரவல் காரணமாக பாடசாலைகளை மூடுவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு கூறுகிறது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறுகையில், மாணவர் ஒருவர் கோவிட் நோயால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டால், முன்னர் செயல்படுத்தப்பட்டபடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் கொரோனா பாதிக்கப்பட்டால் பாடசாலைக் குழுக்கள் மற்றும் பிரதேச சுகாதார அதிகாரி உள்ளடங்கிய குழுவினால் என்ன செய்யப்பட வேண்டும் என்ற வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். இதனையே முன்னர் வெளியிட்ட சுற்றுநிருபத்தில் விளக்கியுள்ளோம். என்றார்.
சுயதீனமாக பாடசாலைகளை மூடும் அளவிற்கான தீர்மான அதிகாரத்தை வழங்கவில்லை என்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் வழங்கியுள்ள வழிகாட்டல்களின் அடிப்படையில் பாடசாலைகளை நடாத்திச் செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.