2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைக்கு தோற்ற முடியாத பரீட்சார்த்திகள் 425 பேருக்கு மீண்டும் பரீட்சைகளில் தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம் எதிர்வரும் 19, 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் செயன்முறை பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செயன்முறை பரீட்சையின் ஒரு பகுதி அல்லது முழுமையான பரீட்சைக்கு தோற்ற முடியாது போனவர்களுக்கு இப்பரீட்சை நடாத்தப்படுகிறது.