இன்று 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இப்பரீட்சைகள் நடைபெறுகின்றன.
தரம் 6 தொடக்கம் 11 வரையான இடைநிலை வகுப்புகளுக்கு
எட்டு பாடங்களில் இம்மதிப்பீடுகள் நடைபெறுகிறன..
முற்றிலும் நிகழ்நிலை (Online) முறையில் நடைபெறும் இப்பரீட்சைகளில் அனைத்து மாணவர்களினதும் பங்குபற்றுதல் கட்டாயம் என பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கான வழிகாட்டல்கள் தொடராக வழங்கப்பட்டு நேற்று (19) மாதிரிப் பரீட்சை ஒன்று நடாத்தப்பட்டது.
இந்த இக்கட்டான சூழலில் மாணவர் கற்றலையும் அது தொடர்பான மதிப்பீட்டு பணிகளையும் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பில் மேற்கொள்ளும் முதலாவது பாடசாலை என்ற பெருமையையும் கௌரவத்தையும் ஸாஹிறாக் கல்லூரி பெறுகிறது.
இது, ஏனைய நகர்ப்புற பாடசாலைகளுக்கும் சிறந்த முன்மாதிரியாகும்.
அனைவருக்கும் பயன்படுத்த முடியுமான எளிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிகழ்நிலையில் தவணைப் பரீட்சை ஒன்றை நடாத்தும் ஸாஹிறாக் கல்லூரிக்கு எமது வாழ்த்துக்கள்.