இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை தரம் 3 க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் காணப்படும் முக்கிய அம்சங்கள் குறித்து கவனம் செலுத்துவோம்.
குறிப்பாக – தகைமைகள் இரு அடிப்படையிலும் மாறுபடுகின்றன. அவ்வாறே வினாத்தள் மற்றும் வினாத்தாள் கட்டமைப்பும் வேறுபடுகின்றன.
இப்பதிவில் திறந்த அடிப்படையிலான விண்ணப்பம் தொடர்பாக நோக்குவோம்.
திறந்த அடிப்படையில் பின்வருமாறு பாடங்கள், மொழி மூல அடிப்படையில் வெற்றிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வெற்றிடங்கள் தேசிய கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் நிலையங்கள், ஆசிரியர் கலாசாலைகளில் காணப்படுகின்றன.
திறந்த அடிப்படையிலான உள்ளீர்ப்பிற்கான தகைமைகள் மற்றும் அனுபவம்
அனுபவம் – தேவையில்லை
ஒருவர் மூன்று முறை மாத்திரமே திறந்த அடிப்படையிலான பரீட்சைக்குத் தோற்ற முடிவும்.
வயதெல்லை –
விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படும் இறுதித்திகதிக்கு வயது 22 வருடங்களுக்கு குறையாமலும் 35 வருடங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
”அதன் பிரகாரம் 1998.03.06 ஆந் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் மற்றும் 1985.03.06 திகதிக்கு அல்லது அதற்குப் பின்னர் பிறந்தவர்களுக்கு மாத்திரம் இதற்காக விண்ணப்பிக்க தகுதி உண்டு””
மூன்று வினாப்பத்திரங்களுக்கு தயாராக வேண்டும்
1. பொது அறிவும் நுண்ணறிவும்
2. கிரகித்தல்
3. விடய ஆய்வு
பரீட்சைக்கான பாடத்திட்டம்
1. பொது அறிவும் நுண்ணறிவும்
பகுதி-1
பொது அறிவூ – (01மணித்தியாலம்)
தேசிய,வலய மற்றும் உலகின் பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட சூழலில் போன்றே எமது சமூகத்திலும் காணப்படுகின்ற கலாச்சார,கல்வி, விஞ்ஞான, அரசியல், பொருளாதார மற்றும் பிற உரிய அடையாளங்கள் தொடர்பாக விண்ணப்பதாரியிடமுள்ள அறிவினை அளவிடுவதை இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது
பகுதி – 11
நுண்ணறிவூ – (01மணித்தியாலம்)
கிரகித்தல் மற்றும் எழுத்தியல், புள்ளிவிபர,உருவகச் சூழலில் சமர்ப்பிக்கப்படுகின்ற பிரச்சினை தொடர்பாக விண்ணப்பதாரியின்முடிவூகளையூம் பதிலளித்தலையூம் பரீட்சிப்பதனூடாக விண்ணப்பதாரியின் கிரகிக்கும் திறனையூம் நுண்ணறிவையூம் அளவிடுதல் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது
02. கிரகித்தல் – 01 மணித்தி யாலம்
வழங்கப்பட்ட தலைப்பு,கருப் பொருளின் ஊடாக கருத்துக்கள் மற்றும் தகவல்களை சமர்ப்பித்தல் கோவைப்படுத்தல் மற்றும் ஒலிபரப்புச் செய்தல் தொடர்பாக விண்ணப்பதாரி காட்டுகின்ற தர்க்க ரீதியான கற்பனைத் திறனை அளவிடுதல் மற்றும் ஓரளவூ சிக்கலான பந்தியொன்றை,ஆவணமொன்றை அல்லது விஞ்ஞாபனமொன்றை புரிந்து கொள்வதற்கும் அதிலுள்ள பிரதான கருத்துக்களை தமது நடையில் சாராம்சமாக தெளிவாகவூம் சரியாகவூம் வெளிப்படுத்தவூம் வழங்கப்பட்டுள்ள வகுதிக்கேற்ப தெரிவூ செய்வதற்கு விண்ணப்பதாரிக்கு உள்ள திறனை அளவிட இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது
03. விடய ஆய்வூ
ஆசிரியர் கல்வி மற்றும் பாடசாலைகள் கல்வித் துறையினுள் ஏற்படக்கூடியதான நிகழ்வூகள் பல சமர்ப்பிக்கப்பட்டு அந்நிகழ்வூகளுக்கு பதில் வழங்குதல் மற்றும் முரண்பாடுகளைத் தீர்த்தல் தொடர்பாக விண்ணப்பதாரிகளின் திறனை அளவிடும் நோக்கில் வினாக்கள் தரப்படும்.
செய்முறைப் பரீட்சை உண்டு. எனினும் மட்டுப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான செய்முறைப் பரீட்சைக்கான புள்ளி வழங்கும் நியதியில் இருந்து திறந்த அடிப்படையிலான விண்ணப்பதாரிகளுக்கு புள்ளி வழங்கும் நியதிகள் வேறுபடுகின்றன.
குறிப்புக்கள்
பரீட்சை நடைபெறும் திகதி – அறிவிக்கப்படவில்லை. பின்னர் பரீட்சைத் திணைக்களத்தினால் அறிவிக்கப்படும். பரீட்சை கொழும்பில் நடைபெறும்
பட்டமொன்று, பட்டப் பின் கல்வி டிப்ளோமா, அடிப்படைப் பட்டத்திற்குப் பின்னரான பட்டம் பெற்றுள்ளவர்கள் கட்டாயமாக வர்த்தமானி அறிவித்தலை வாசிக்கவும்.
விண்ணப்பம்