அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்கும் திட்டம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பல தடவைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஜனாதிபதியினால் சர்ச்சைகள் கிளப்பப்பட்டு நிறுத்திவைக்கப்பட்ட டெப் வழங்கும் திட்டம் அண்மையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது ஜனாதிபதி அந்த அனுமதி முன்னோடி திட்டத்திற்கு மாத்திரமே என கூறியுள்ளார்.
தற்போது அனுமதி வழங்கப்பட்ட திட்டத்தின் படி இது க.பொ.த உயர் தர தேசிய பாடசாலைகளுக்கு மாத்திம் வரையறுக்கப்பட்ட முன்னோடித் திட்டமாகும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அண்மையில் கல்வி அமைச்சர் ‘விரைவில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கும் இவ்வாறான திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கடந்த வாரம் பிரதமர் தென்ஆசியாவிலேயே உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்கிய முதல் நாடு இலங்கை என்ற பெருமை உரித்தாகும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
எனினும் இவை அனைத்திற்கும் பதிலாக ‘இத்திட்டம் வெறும் முன்னோடித்திட்டம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதற்கிடையில் டெப் வழங்கும் இத்திட்டத்திற்கான கேள்வி மனுக்களில் மோசடி இடம்பெற்றதாக எழுந்துள்ள குற்றசாட்டுக்கள் தொடர்பாக விளக்கமளிப்பதற்கு இன்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் அரச நிறுவனங்களில் ஊழல் மோசடி தொடர்பாக ஆராயும் ஆணைக்குழுவிடம் சாட்சியம் அளிப்பதற்காக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.