ஆரம்ப மற்றும் இடை நிலை மாணவர்களுக்கும் அடுத்தடுத்த வருடங்களில் டெப் வழங்குவதற்கு முயற்சிப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்திற்குள் உயர் தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் வழங்கப்பட்டு விடும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அடுத்த கட்டமாக ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கும் இடை நிலை மாணவர்களுக்கும் நாம் டெப் வழங்க உத்தேசித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.