காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ள திங்கட்கிழமை ஹர்த்தாலுக்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தமது முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் வடக்கு மாகாணத்தின் அனைத்து செயற்பாடுகள் அனைத்தையும் முடக்கும் ஜனநாகயப் போராட்டத்துக்கு தாம் ஆதரவு வழங்குவதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
வடக்குப் பாடசாலைகளில் கடமை புரியும் அதிபர்கள், ஆசிரியர்கள் தமது பணிகளைப் புறக்கணித்து ஆதரவு வழங்குமாறும் அச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.