2021 ஆம் வருடமாகும் போது ஒரு வகுப்பறையில் கற்கக் கூடிய மாணவர்களின் உயர்ந்த பட்ச எண்ணிக்கை 35 ஆக மட்டப்படுத்தும் கொள்கை ரீதியான முடிவுகளின் படி இவ்வரும் தரம் ஒன்றில் 37 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
சில பாடசாலைகளில் அரசியல் மற்றும் இதர காரணங்களால் இத்தீர்மானம் அவ்வாறே அமுல்படுத்தப்படுவதில் சிக்கல்கள் தோன்றியுள்ளதாகவும் தேசிய ரீதியில் மேற்கொள்ளப்படும் எந்தத் தீர்மானத்தையும் மாற்றும் அதிகாரம் யாருக்குமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் அண்மையில் குலியாப்பிட்டிய கிலிம்பொல ஆரம்பப் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கற்றல் வள நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.