க.பொ.த சாதாரண தர அனுமதி அட்டைகள் நாளை முதல் வினியோகிக்கப்படும்
சாதாரண தரப் பரீட்சை அனுமதி அட்டைகள் நாளை வெள்ளிக்கிழமை முதல் வினியோகிக்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
சாதாரண தர அனுமதி அட்டைகளில் பெரும்பகுதி தமக்குக் கிடைத்துள்ளதாகவும் அவற்றை பிரதேச வாரியாக வேறுபடுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்த அவர், நாளை, நாளை மறு நாள் வினியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இன்னும் கிடைக்க வேண்டிய அனுமதி அட்டைகளையும் விரைவில் வினியோகிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தனிப்பட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் திங்கட்கிழமைக்குள் வினியோகக்கப்பட்டும் என அவர் தெரிவித்தார்.