Admission Card: GCE (O/L) 2021(2022)

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபாலிடப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாடசாலை பரீட்சார்த்திகளுக்கு பாடசாலைகளுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திளுக்கு அவர்களுடைய முகவரிக்கும் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மே மாதம் 23 ஆம் திகதி முதல் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனுமதி அட்டை மே 12 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்காதவர்கள் பரீட்சைத் திணைக்களத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைத் திணைக்களம் வேண்டியுள்ளது.

அனுமதி அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு தேவையான வசதிகள் பரீட்சைத் திணைக்கள இணையத்தளத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Teachmore
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!