பாடசாலை நேரத்திற்குப் பின்னர் மாணவர்களுக்கு தொழிற்கல்வி வழங்கும் வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்திலுள்ள 7 பாடசாலைகளில் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.மகிந்த யாப்பா தெரிவித்தார்.
குறித்த மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அதேநேரம் பாடசாலை நேரத்திற்குப் பிறகு மாணவர்களின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.