விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவு 25% அதிகரிப்பு

உயர் தரப் பரீட்சை கடமையில் ஈடுபட்டவர்கள் மற்றும் விடை தாள் திருத்தியவர்கள் மற்றும் தரம் 5 விடைத் தாள் திருத்தம் முதலானவற்றுக்கான கொடுப்பனவுகள் இன்னமும் கொடுக்கப்படவில்லை என ஆசிரிய அதிபர் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.


இன்று கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகள், பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது ஆசிரிய அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர். இதில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் சாராம்சம் வருமாறு:

இதற்காக சுமார் 600 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடமைகளுக்காக செல்வதற்கு பயணச் செலவுகள் அதிகரித்துள்ளன. எனவே விடைப்பத்திர திருத்தக் கொடுப்பனவு 25% இனால் அதிகரிக்கவும் நாளாந்த கொடுப்பனவை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அத்தோடு இதற்கான முற்பணக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனவும் உடன்பாடு காணப்பட்டது. இது தொடர்பாக எழுத்து மூல அறிவித்தல் வெளியிடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எரிபொருள் கொடுப்பனவு பெற்றுக்கொள்ள ஆசிரிய அதிபர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காகவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
எனவே விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பித்து நடாத்திச் செல்லுவதற்கும் ஆசிரிய அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இணக்கப்பாடு காணப்பட்ட விடயங்கள் அமுலுக்கு வராவிட்டால் மதிப்பீட்டின் இடையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ள தயங்கப் போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஜோசப் ஸ்டாலின் மற்றும் இலங்கை ஆசிரிய சேவைகள் சங்கத்தின் மகிந்த ஜயசிங்க ஆகியோர் குறிப்பிட்டனர்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!