க.பொ.த உயர்தரம் : வணிகத் துறை: பாடத்தெரிவும் பல்கலைக்கழக பாடநெறிகளும்

.பொ.சா.கல்வியின் பின் தெரிவு வணிகப்பிரிவு (Commerceஎனின்….

ஒவ்வொரு வருடமும் .பொ. (சா.)ரப் பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக தோற்றும் மாணவர்களில் அண்ணளவாக 50 வீதத்திற்கும் 60 வீதத்திற்கும் இடைப்பட்டவர்களே உயர்தரம் கற்பதற்கு தகுதி பெறுகின்றனர்அவ்வாறு தகுதி பெற்ற மாணவர்களில் .பொ. (.பரீட்சைக்கு தோற்றுபவர்களில் ஒரு பகுதி   மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெறுகின்ற போதிலும்  பல்கலைக்கழகங்களில் காணப்படும் மனிதவள மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறையின் நிமிர்த்தம் சிறிய தொகை மாணவர்களே இலங்கையிலுள்ள  தேசிய பல்கலைக்கழகங்களில்  உள்ள கற்கை நெறிகளுக்காக ஒவ்வொரு வருடமும்  உள்வாங்கப்படுகின்றனர்.

காலம் மிக விரைவாக மாறி வருகின்றதுமாற்றங்கள்  காலத்தினதும் சூழலினதும்  தேவைக்கேற்ப மாற்றமடைவது அவசியமாகவுள்ளதுகல்வியிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளனநாமும் உரிய வேகத்துக்கு  ஓடும்  போதே  உலகில்  வெற்றிபெற  முடியும்.

முன்னரை விட தற்காலத்தில் எதிலும் பலத்த போட்டி நிலவுகின்றனஎனவே தற்காலச் சூழலிற்கேற்பவும் தொழிற் சந்தைக்கேற்பவும் நாம் தயாராகிக் கொள்ள வேண்டும்பல்கலைக்கழங்களில் புதிதாக பல பாடநெறிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனபொதுவான பாடங்களை அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கற்பதன் மூலமே தொழில் உலகில் சிக்கல் நிலை ஏற்படுகின்றதுஎனவேபரவலாக தொழில்களை பல்வேறு துறைகள் சார்ந்து பெற்றுக்கொள்வதற்கு பாடநெறிகளை பகிர்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றதுஅந்த வகையிலேயே .பொ. உயர்தரத்தில் வணிகத்துறையினை தெரிவு செய்யும் மாணவர்களுக்கான பாடத்தெரிவுகள்பல்கலைக்கழக கற்கை நெறிகள்ஏனைய துறை சார்ந்த கற்கை நெறிகள்அரச மற்றும் தனியார் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக தெளிவூட்டப்படுகின்றது.

அன்பான பிள்ளைகளே உங்களின்  வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது தற்போது நீங்கள் எடுக்கும் தீர்மானமே…..
.பொ. (.வர்த்தகத் துறையை தெரிவு செய்ய நீங்கள் தீர்மானிப்பின் கீழ்வரும் பாடங்களில் இருந்து மூன்று பாடங்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
1.            வணிகக் கல்வி
2.            பொருளியல்
3.            கணக்கீடு

அல்லது

குறைந்தது மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களில்  இரு பாடங்கள்அத்துடன்  மூன்றாவது பாடம்  பின்வருவனவற்றிலிருந்து..
    விவசாய விஞ்ஞானம்
     புவியியல்
     வணிகப் புள்ளிவிபரவியல்
     ஜேர்மன்
     இணைந்தகணிதம்
     வரலாறு
     அரசியல் விஞ்ஞானம்
     ஆங்கிலம்
     அளவையியலும் விஞ்ஞானமுறையும்
     பிரெஞ்சு
     பௌதிகவியல்
     தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்

.பொ. (.வர்த்தகத் துறையைப் பின்பவற்றுவதன் மூலம் மாணவர்கள் பெறும் வாய்ப்புக்கள்
1. தேசிய பல்கலைக்கழகங்கள்
முகாமைத்துவத்தில் பட்டங்கள்கணக்கியல் பட்டங்கள்வணிகமானிப் பட்டங்கள்சட்டமானிப் பட்டங்கள் உட்பட தேசிய பல்கலைக்கழகங்களில் 60 வரையான பாடநெறிகளைக் கற்கும் வாய்ப்பு அவற்றின்  விரிவான விபரங்கள்.

வணிகப் பிரிவு
1. முகாமைத்துவம் (Management)
*  கொழும்புபல்கலைக்கழகம்
*  களனிப் பல்கலைக்கழகம்
*  ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம்
*  உறுகுணைப் பல்கலைக்கழகம்
*  பேராதனைப் பல்கலைக்கழகம்
*  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
*  கிழக்குப் பல்கலைக்கழகம்
*  இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
*  இலங்கை ராஜரட்டபல்கலைக்கழகம்
*   இலங்கை சபரக முவப் பல்கலைக்கழகம்
*  இலங்கை வயம்பப் பல்கலைக்கழகம்
2.முகாமைத்துவம் (பொதுசிறப்பு Management (Public) Special
*  ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம்

3.சொத்து முகாமைத்துவமும் மதிப்பீடும் ((Estate Management & Valuation)
*    ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம்
4.வணிகவியல் (Commerce)
*   களனிப் பல்கலைக்கழகம்
ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம்
*   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
*   கிழக்குப் பல்கலைக்கழகம்
*    இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
5. முகாமைத்துவக் கற்கைள் (TV) Management Studies (TV)
*   திருகோணமலைவளாகம்
*   வவுனியாவளாகம்
6.வியாபாரத் தகவல் முறைமைகள் (சிறப்புBusiness Information Systems (Special)
*     ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம்

வணிகப் பிரிவிற்கு மேலதிகமாக வேறு பாடப்பிரிவுகளிலிருந்து 
மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகைமைபெறுகின்ற கற்கைநெறிகள்
1. தகவல் தொழில்நுட்பம் Information Technology (IT)
*    மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
2.முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் Management & Information Technology (MIT)
*   களனிப் பல்கலைக்கழகம்
3.கணிய அளவையியல் (Quantity Surveying)
*    மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
4.அளவையியல் விஞ்ஞானம் (Surveying Science)
*    சபரகமுவப் பல்கலைக்கழகம்
5.பட்டினமும் நாடும் திட்டமிடல் (Town & Country Planning)
*     மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
6.கட்டடக்கலை (Architecture)
*    மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
7.நவநாகரிக வடிவமைப்பும் உற்பத்தி அபிவிருத்தியும் Fashion Design & Product Development
*     மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
8.நிலத்தோற்றக் கட்டடக்கலை Landscape Architecture
*    மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
9.வடிவமைப்பு Design
*     மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
10.சட்டம் Law
*     கொழும்புப் பல்கலைக்கழகம்
*     பேராதனைப் பல்கலைக்கழகம்
*    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
11.வசதிகள் முகாமைத்துவம் Facilities Management
*     மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
12.கணக்கிடலும் முகாமைத்துவமும் Computation & Management
*     பேராதனைப் பல்கலைக்கழகம்
13.முகாமைத்துவமும் தகவல் தொழில்நுட்பமும் (SEUSL)
Management & Information Technology (SEUSL)
*    தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
14.தொழில்முயற்சியும் முகாமைத்துவமும் Entrepreneurship & Management
*      ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
15.கைத்தொழில் தகவல் தொழில்நுட்பம் Industrial Information Technology
*    ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
16.விருந்தோம்பல்,சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் முகாமைத்துவம்
Hospitality, Tourism and Events Management
*     ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்
17 .உடற்றொழில் கல்வி Physical Education
*     சபரகமுவப் பல்கலைக்கழகம்
18.விளையாட்டு விஞ்ஞானமும் முகாமைத்துவமும் Sports Science &Mangement
*     ஸ்ரீ ஜயவர்த்தனபுரப் பல்கலைக்கழகம்
*      சபரகமுவப் பல்கலைக்கழகம்
19.தகவல் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும் Information Technology & Management
*      மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
20.சுற்றுலாவும் விருந்தோம்பல் முகாமைத்துவமும் Tourism & Hospitality Management
*     சபரகமுவப் பல்கலைக்கழகம்
*       ரஜரட்டபல்கலைக்கழகம்
21.தகவல் முறைமைகள் Information Systems
*      கொழும்புப் பல்கலைக்கழககணனிக் கல்லூரி
22.மொழிபெயர்ப்புகற்கைகள் Translation Studies
சபரகமுவப் பல்கலைக்கழகம்
*       களனிப் பல்கலைக்கழகம்
*    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
23.திரைப்படமும் தொலைக்காட்சி கற்கைகள் Film & Television Studies
*     களனிப் பல்கலைக்கழகம்
24.செயற்றிட்ட முகாமைத்துவம் Project Management
*      வவுனியாவளாகம்
25.தகவலும் தொடர்பாடல் தொழில்நுட்பமும் Information & Communication Technology
*       வவுனியாவளாகம்
*      ரஜரட்டபல்கலைக்கழகம்
26.உணவு வணிக முகாமைத்துவம் Food Business Management
*       சபரகமுவப் பல்கலைக்கழகம்
27.வியாபாரவிஞ்ஞானம் Business Science
*     மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
2. இலங்கைப் பல்கலைக்கழகங்களில் உள்ள வணிகத்துறை சார்ந்த வெளிவாரிக் கற்கை நெறிகள்
1. Bachelor of Business Administration – University of Peradeniya
2.  B.Sc. Business Administration (General)-  University of Sri  Jayewardenepura      
3.  B.Sc. Management (Public) General – University of Sri  Jayewardenepura      
4.  Bachelor of Commerce (General) – University of Sri  Jayewardenepura      
5.  Bachelor of Commerce (Special)– University of Kelaniya
6.  Bachelor of Business Management – University of Kelaniya
7.  Bachelor of Business Administration  -Rajarata University of Sri Lanka
8.  Bachelor of Business Administration (General) – Rajarata University of Sri Lanka
9.  Bachelor of Business Administration (Agribusiness Management) – Sabaragamuwa University of Sri Lanka
9.  Higher Diploma in Corporative Business Management – Sabaragamuwa University of Sri Lanka
10.  Bachelor of Commerce –  University of Jaffna
11.  Bachelor of Commerce (B.Com) General  -South Eastern University of Sri Lanka
12.  Bachelor of Business Administration (General) – South Eastern University of Sri Lanka
13. Bachelor of Business Management (External) General-  EasternUniversity,Sri Lanka

2. கல்வியியற் கல்லூரிகள் :-

மகரகம தொழில் முயற்சியாண்மை மற்றும் முகாமைத்துவம் பற்றிய தேசிய கல்வியற் கல்லூரியினாலும் ஏனைய தேசிய கல்வியற் கல்லூரிகளினாலும் நடாத்தப்படும் பாடநெறிகள்.
3. தொழில் நுட்பக் கல்லூரிகள் :-
நாடு பூராகவுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளால் நடாத்தப்படும் பாடநெறிகள்
4. உயர் தொழில் நுட்பநிறுவனங்கள் :-
 கணக்கியலில் உயர் தேசியடிப்ளோமா (HNDA)
வர்த்தகக் கற்கைகளில் உயர் தேசியடிப்ளோமா (HNDC)
Bachelor of Business Administration (Special)(Honours) 
Postgraduate Diploma in Public management and Financial Management
Master of Public Management
B.Sc. in Business Management (Areas of Specialization: Human Resource Management, Logistics Management, Project Management and Industrial Management)
 B.Sc. in Management Information Systems
 
Bachelor of Science in Business Management (Human Resource Management) (Special)
Bachelor of Science in Business Management (Logistics Management) (Special)
Bachelor of Science in Business Management (Industrial Management) (Special)
Bachelor of Science in Business Management (Project Management) (Special)
Bachelor of Science in Management Information Systems (Special)
Postgraduate Diploma in Business Management
Postgraduate Diploma in Human Resource Management
Postgraduate Diploma in Industrial Management
Postgraduate Diploma in Project Management
Master of Business Administration
Master of Business Studies
Bachelor of Management Honours in Accounting and Finance
Bachelor of Management Honours in International Business
 
Bachelor of Management Honours in Retail Marketing and Branding
Bachelor of Management Honours in Supply Chain Management
Bachelor of Management Honours in Tourism and Hospitality Management[BMgtHons(Tourism and HospitalityMgt)]
 
BSc in Applied Accounting (General)
BSc in Applied Accounting (Special)
 
Degree of Bachelor of Science (Special) in Banking and Finance
Degree of Bachelor of Science (Special) in Insurance and Risk Management
Degree of Bachelor of Science (Special) in Regional Science and Planning
 
Bachelor of Science in Business Management (Human Resources Management)
Master of Business Administration
Bachelor of Management Honours in Marketing 
 
Bachelor of Management Honours in Human Resource 
Bachelor of Management Honours in Marketing 
Bachelor of Management Honours in Accounting 
 
Bachelor of Business Management Honours in Marketing Management
Bachelor of Business Management Honours in Supply Chain Management
Bachelor of Business Management Honours in Operations Management
Bachelor of Business Management Honours in Human Resource Management
 
Bachelor of Business Administration (BBA)

 
5. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் :-
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வணிகம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான பட்டங்கள்.
7. தொழில்துறைசார்  பாடநெறிகளை நடாத்தும் நிறுவனங்கள்:-
    இலங்கை பட்டயக்  கணக்காளர்  நிறுவனத்தின் பாடநெறிகள் (CA)
•   லங்கை சான்றுப்படுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர் நிறுவனத்தின் பாடநெறிகள் (CMA)
•  இலங்கை கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர்  நிறுவனத்தின் பாடநெறிகள் (AAT)
     இலங்கை சந்தைப்படுத்துநர்  நிறுவனத்தின் பாடநெறிகள் (SLIM)
      இலங்கை வங்கியாளர்  நிறுவனத்தின் பாடநெறிகள்
    பட்டய முகாமைத்துவக் கணக்காளர் நிறுவனத்தின் பாடநெறிகள் (CIMA)
  பட்டய சான்றுப்படுத்தப்பட்ட கணக்காளர்  நிறுவனத்தின் பாடநெறிகள் (ACCA)
8. அரச மற்றும் தனியார் தறைநிறுவனங்களில் தொழில் வாய்ப்புக்கள்
             இலங்கைகணக்காளர் சேவை (SLAcs)
             இலங்கைநிர்வாகசேவை  (SLAS)
             இலங்கைகல்விநிர்வாகசேவை(SLEAS)
             இலங்கைவெளிநாட்டுசேவை(SLFS)
             இலங்கைதிட்டமிடல் சேவை(SLPS)
             கணக்காய்வுஅத்தியட்சகர் சேவை
             பல்கலைக்கழகவிரிவுரையாளர்
             இலங்கைஆசிரியர் கல்வியியலாளர் சேவை (SLTES)
             இலங்கைஆசிரியர் சேவை(SLTS)
             வங்கித்துறைதொழில்கள்
             வரிமதிப்பீட்டாளர்
             வரிஉத்தியோகத்தர்
             வரிஆலோசகர்
             நிதிப்பகுப்பாய்வாளர்கள்
             நிதிஉத்தியோகத்தர்கள்  உள்ளிட்ட அரசதொழில் வாய்ப்புக்கள்.
             தனியார் வங்கிகள்நுண்நிதிக்கடன் சேவை நிறுவனங்கள்காப்புறுதி நிறுவனங்கள் என்பவற்றில் காணப்படும் முகாமையாளர் உள்ளிட்ட தொழில் வாய்ப்புக்கள்.
வணிகத்துறையைத் தெரிவு செய்யும் உங்களுக்கு காத்திருக்கும் இந்த வாய்ப்புக்களை மீண்டும் ஒரு முறை வாசித்து கிரகித்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் தெரிவை மேற்கொள்ளுங்கள். பயணம் எங்கே முடியும் என்பதை திட்டமிட்ட பின் பயணத்தை ஆரம்பியுங்கள்.
உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்.
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!